Corona Update 2020/05/21, 6.20pm கொரோனா அதிகரிப்பு சற்று முன் வரை



இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி புதிதாக 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1045ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 15 பேரும் அண்மையில் டுபாயில் இருந்து வருகைத்தந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு சற்றுமுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
1028ஆக காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 1030ஆக காணப்படுகின்றது. அவர்களில் 435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments