சிறையிலடைத்தாலும் நாம் உங்களை தோற்கடிப்போம் ; சதுர சேனரத்ன ஆவேசம்


2015ஆம் ஆண்டு மஹிந்த அரசை தோற்கடித்தது போன்று கோட்டாபய அரசையும் வீழ்த்துவோம் என கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி ரணில் தரப்பு, சஜித் தரப்பு என இரண்டாக பிரிந்து விட்டது. இதனால் ராஜபக்ஸ தரப்புக்கு சந்தோஸம் ஏற்பட்டிருந்தது. எனினும் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்வதற்கு ரணில் தரப்பும், சஜித் தரப்பும் இணைந்து குரல் கொடுக்கின்றன.
இது ராஸபக்ஸ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ராஜித சிறை வைக்கப்பட்டாலும் பிரிந்த ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து விட்டன. ராஜிதவை சிறையிலடைக்க மஹிந்த மற்றும் சந்திரிக்கா முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியாமல் போனது. அதை தற்போது கோட்டாவும் செய்ய முயற்சிக்கின்றார்.
ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இந்த ஆட்சியை தோற்கடிககும் வரை நாம் ஓயமாட்டடோம். எம்மை கொலை செய்யலாம். ஆனால் தோற்கடிக்க முடியாது என்றார்.

Post a Comment

0 Comments