லண்டன் பறக்கும் இலங்கை விமானங்கள்பிரித்தானியாவின் லண்டன் நகருக்கான விசேட விமான சேவைகள் 3,4,5 ஆம் திகதிகளில் நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கிலும் இந்த விசேட விமான சேவைகளை நடத்தவுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதனை தவிர அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி விமானம் ஒன்றை அனுப்பி வைக்க உள்ளதாகவும் அங்குள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நோக்கில் இந்த விமானம் அங்கு அனுப்பி வைக்கபபட உள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments