இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கும் ???


கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் இம்மாதம் இறுதிவரை ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் இம்மாத இறுதியில் ஆராயப்பட்டே இந்த ஊரடங்கை தளர்த்துவதா? நீடிப்பதா என்று தீர்மானிக்கப்பட உள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் அடுத்த மாதம் தளர்த்தப்பட்டாலும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 1400 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் நிறைவுற்ற பின்பே கொழும்பில் ஊரடங்கை தளர்த்துவதா இல்லையா என்ற தீர்மானத்துக்கு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments