பெரும் பஞ்சமும் பட்டினியும் ஏற்படலாம்: ஐ.நா சபை எச்சரிக்கை


உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பொருளாதாரம் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளன. இதனால்ஆண்டின் இறுதியில் பெரும் பஞ்சமும் பட்டினியும் ஏற்படும் என ஐ.நா சபை கடுமையான எச்சரித்திருக்கிறது.
வட கொரியாவில் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும் விதமாக சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதை அடுத்து அந்நாட்டு அரசின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
இதனால் வேறு வழி இல்லாமல் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும் விதமாக சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என வடகொரிய அதிபர் வலியுறுத்தி வந்தார்.

வடகொரிய அதிபர் கிம்மின் அறிவுறுத்தலை தாமதப்படுத்தாமல், நம்போ நகரில் உள்ள விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் வயல்வெளியில் நாற்று நடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்குப் பின்னர் உலகில் பெருமளவான நாடுகள் தற்சார்பு பொருளாதாரத்தினை மேற்கொள்ளும் திட்டதினை ஆரம்பிப்பார்கள் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments