இன்று அலறி மாளிகையில் என்ன நடந்தது ???கொவிட் - 19 அனர்த்த நிலமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும் அவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காகவும் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று முற்பகல் 10.15 இற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலந்துரையால் 12.45 இற்கு நிறைவடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா ஒழிப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொவிட் - 19 அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை தொடர்பான நீண்ட விளக்கம் ஒன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களும் உளவுப்பிரிவினரும் வழங்கினர்.
பிரதம அமைச்சரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சரின் செயலாளர், உட்பட அரச அதிகாரிகள். சுகாதாரத்துறை சார்ந்த தலைவர்கள், பாதுகாப்பு பிரிவுகளைச் சேர்ந்த தெலைவர்கள், கொவிட் - 19 ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராமன்ற உறுப்பினர்களையே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருப்பினும் எதிரணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். 

Post a Comment

0 Comments