இலங்கையில் இனி கார் இறக்குமதி செய்ய முடியாது ; அமைச்சரவை அங்கீகாரம்


இலங்கைக்கு ஆடம்பரப்பொருட்கள் மற்றும் கார்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்துள்ளது அரசாங்கம்.
நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பந்துல குணவர்தன இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அந்நிய செவலணியை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் ஆடம்பர பொருட்கள் மற்றும் கார்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments