தவத்தின் சத்தியத்திற்கான அழைப்பை ஏற்பாரா அதாவுல்லாஹ் ???


-அபூ ஜாஷி -
முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மரணத்தில் வேட்பாளர் எ.எல்.தவம்  வெடில் கொளுத்தியது உண்மையெனில் அதனை உறுதிப்படுத்த மார்க்க ரீதியிலான சத்தியம் ஒன்றிற்கான பொதுச் சவால் அழைப்பினை தவம் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு விடுத்துள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய பொதுத் தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான எ.எல்.தவம் நேற்றைய தினம் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேரலையிலேயே இவ்வழைப்பை விடுத்துள்ளார். 

குறித்த காலப்பகுதியில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கோலோச்சிய முன்னாள் அமைச்சர்களான சேகு இஸ்ஸதீன், அதாவுல்லா இருவருமே இக்குற்றச்சாட்டினை அடிக்கடி தவம் மீது பகிரங்கமாக கூறி வந்துள்ள நிலையிலேயே தவம் இவ்வாறு பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளார். 

அதாவுல்லாஹ் அவர்களின் மிக ஆழமான ஆதரவாளராக செயற்பட்டு வந்த தவம் அக்கரைப்பற்றின் முதல்வராகவும் கடமையாற்றியுள்ளார். விசேடமாக தவம் கட்சி மாறியதன் பின்னரே முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் முதற்தடவையாக கடந்த தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments