"அரசாங்கத்தின் கொள்கைகளை நிராகரிப்பவர்கள் நாட்டுக்கு சுமையானவர்கள் "


தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும், சரியானதைச் செய்ய முடியாத அரச அதிகாரிகள் நாட்டிற்கு ஒரு சுமை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை பிரிவிற்கு சொந்தமான பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர்,
அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை எடுக்கும்போது, ​​அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சரியானதைச் செய்ய முடியாத அரச அதிகாரிகள் நாட்டிற்கு ஒரு சுமையானவர்களே.
அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினைகளை தீர்ப்பதனை தவிர்த்து புறக்கணிப்பதல்ல.
அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைய அரசாங்கத்தின் கொள்கைகள் நாட்டின் முன் வைக்கப்படுவதால், அவற்றை பின் தொடரும் போது பகுத்தறிவற்ற சட்டங்கள் தடையாக இருக்க கூடாது.
தற்போதுள்ள சூழ்நிலையில் பொது மக்களின் தேவையறிந்து அரச ஊழியர்கள் சேவையாற்ற வேண்டும். அது தவிர்ந்து அரச ஊழியர்கள் மெத்தனப்போக்கில் செயல்படுவார்களாயின் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments