போக்குவரத்து ; ஆசனங்களுக்கு ஏற்றவாறு பயணிக்கலாம்தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், இன்று (13) முதல், ரயில்கள் மற்றும் பஸ்களிலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைய பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களது பணியிடங்களுக்குச் செல்லவும் மீண்டும் இருப்பிடம் திரும்பவும் முக்கியத்துவம் கொடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று (12) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் ஆசனங்களினது எண்ணிக்கைக்கமைய பயணிகளை ஏற்றியிறக்க முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரயில் போக்குவரத்துக்கான சீசன் டிக்கெட்டுகள் மற்றும் அந்த டிக்கெட்டுகள் அற்றோருக்கான சீசன் டிக்கெட்டுகளை விநியோகிக்கும் பணிகள், இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்காகத் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் விநியோகித்துள்ள அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென, அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments