முன்னாள் எம்.பி ஹிருனிகாவின் விஷேட தானம்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தலைமுடியின் ஒரு பகுதியை புற்றுநோய் பாதித்த பெண்நோயாளிகளுக்கு விக் செய்யும் திட்டத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
“புற்றுநோய் இது ஒரு பயமுறுத்தும், கொடூரமான மற்றும் ஒரு துக்ககரமான அனுபவமாகும். ஆமாம் .. அவர்களது வலியை எங்களால் அகற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணம் அவர்களை மகிழ்விக்க முடியும்.
எனவே என் தலைமுடியை ஒரு புற்றுநோயாளிக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளேன், அவர் என்னை விட அதிகமாக தேவைப்படுவார். எனவே பெண்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன், நீங்கள் ஒரு கெயாகட் வைத்திருந்தால், உங்கள் தலைமுடியை தூக்கி எறிய வேண்டாம், தயவுசெய்து அதை தேவையானவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவும். நன்றி ”என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments