வட கொரியா அதிபரின் அதிரடி ; கைதட்டி வரவேற்ற அதிகாரிகள்உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பொருளாதாரம் முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் பெரும் பஞ்சமும் பட்டினியும் ஏற்படும் என ஐ.நா சபை கடுமையான எச்சரித்திருக்கிறது.
இதற்கிடையில், வட கொரியாவில் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும் விதமாக சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் முடிவெடுத்துள்ளார்.
அண்மையில் கிம் பற்றிய எந்த தகவலும் முதலில் வெளியே வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் வடகொரிய அதிபருக்கு உடல்நிலை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் இருக்கிறது என்று தென் கொரியா தெரிவித்தது.
இந்நிலையில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதை அடுத்து அந்நாட்டு அரசின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
இதனால் வேறு வழி இல்லாமல் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரும் விதமாக சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என வடகொரிய அதிபர் வலியுறுத்தி வந்தார்.
இதனை அடுத்து அவரின் இந்த கொள்கை முடிவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வடகொரிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
இதேபோல் வடகொரிய அதிபர் கிம்மின் அறிவுறுத்தலை தாமதப்படுத்தாமல், நம்போ நகரில் உள்ள விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் வயல்வெளியில் நாற்று நடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்குப் பின்னர் உலகில் பெருமளவான நாடுகள் தற்சார்பு பொருளாதாரத்தினை மேற்கொள்ளும் திட்டதினை ஆரம்பிப்பார்கள் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

Post a Comment

0 Comments