ஹட்டனில் மண்சரிவு ; போக்குவரத்து ஸ்தம்பிதம்


ஹட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா - வனராஜா சமர்வில் பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
விடாது பெய்த அடைமழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, போக்குவரத்துக்காக இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, தொடர்மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

Post a Comment

0 Comments