மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமும் தனது கடமைகளை ஆரம்பிக்கின்றதுமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்து அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் குறிப்பிடத்தக்களவு ஆளணியை ஈடுபடுத்தி, சிற்சில வரையறைகளுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல், வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவை பெறுனர்கள் வார நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கத்தை அழைத்து திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டுமென திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திணைக்களத்தின் ஒரு நாள் சேவையும் மீள அறிவிக்கப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments