கொரோனாவால் அழியப்போகும் முழு இனம் ???கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அமேசன் காடுகளில் வாழும் அப்பாவி பழங்குடியின மக்களுக்கும் ஆபத்து அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெரும்பாலான பகுதிகளில்தான் உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசன் மழைக்காடுகள் உள்ளன.
இந்தக் காடுகளில் 300 க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி உலகத்தோடு இன்னும் தொடர்புக்கே வராதவர்கள். பழமை சிறிதும் குன்றாமல் குடிசை அமைத்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள்.
இருப்பினும் கொரோனா வைரசின் கொடிய பார்வை இவர்கள் பக்கமும் திரும்பி உள்ளது. பழமை மாறா பழங்குடியின மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.
வெளி உலகத்தோடு சிறிதும் பிணைப்பற்ற இவர்களும் வைரஸ் தாக்குதலால் பாதிப்படைவதற்கு மக்களே காரணம்.
ஆண்டாண்டு காலமாக அமேசன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிர்ச்சி அளிப்பதாகவும், வைரஸ் பரவல் அதிகமானால் அவர்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வைரஸ் பாதிப்பிலிருந்து பழங்குடியினரை பாதுகாக்க பிரேசில் நாட்டு அரசு அக்கறை காட்ட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments