அமெரிக்கா : அழித்து விடுவோம், ஈரான் : தரை மட்டமாக்கப்படும்


அமெரிக்காவின் மிரட்டலுக்கு பிறகும் வளைகுடா பகுதியில், ஈரான் கடற்படை தனது வழக்கமான பணிகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கப்பல்களை அச்சுறுத்தும் விதமாக ஈரானியக் கப்பல்கள் நடந்துகொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கக் கடற்படைகளுக்கு முன்னரே உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு, அவ்வாறு தாக்குதல் நடத்தினால், வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சமீபத்திலும் அமெரிக்கா ஈரானுக்கு மிரட்டல் விடுத்திருந்தது.

Post a Comment

0 Comments