மக்களின் தேவையுணர்ந்து செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ்


-அபூ ஜாசி -
அரசியல் தேவைப்பாடுகளுக்கு அப்பால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான இக்காலப் பகுதியில் மக்களின் தேவையுணர்ந்து எவ்விதமான பாகுபாடுமற்ற முறையில் மக்களுக்காக செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இக்கட்டான இக்காலப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திக்கும் பொருட்டு பல்வேறு உதவிகளை முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமாக அரிசி, சீனி, மரக்கறி வகைகள் என பொதியிடப்பட்ட பொருட்கள் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பப்படுகின்றன. 

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான உதவிகள் சத்தமற்ற முறையில், அரசியல் சாயம் பூசப்படாமல், விருப்பு வாக்குகளுக்கான வேட்டைகளுக்கான வேண்டுகோள்களை விடுக்காமல் செய்யப்படுவதானது மக்களிடையே பெரிதும் வரவேற்பினை பெற்றுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவ்வாறான நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பினை செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments