திகாமடுல்ல மாவட்டம் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு ???


- அபூ ஜாஸி -
அம்பாறை மாவட்ட அரசியல் களம் சூடு பிடிக்கத்தொடன்கியுள்ளது. எதிர்வரப்போகும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, பொது ஜன பெரமுன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பன பிரதான கட்சிகளாக களம் கண்டுள்ளன.

இந்நிலையில் 7 ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் வக்களிக்கத் தகுதியுள்ள சுமார் 503,000 (2018ம் ஆண்டைய கணக்கெடுப்பின் பிரகாரம்) வாக்காளர்களே இவ் ஆசனங்களை தீர்மானிக்கும் தகுதியை கொண்டுள்ளனர். 
இதில் 
  • அம்பாறை தொகுதி               :  174,421 வாக்காளர்களையும் 
  • கல்முனைத் தொகுதி            :    76,283 வாக்காளர்களையும்
  • சம்மாந்துறை தொகுதி        :    88,217 வாக்காளர்களையும்
  • பொத்துவில் தொகுதியில்  :  164,869 வாக்காளர்களையும்

மொத்தமாக 503,790 வாக்களர்களை இம்மாவட்டம் கொண்டுள்ளது. 

இதில் கடந்த உள்ளூராட்சி, ஜனாதிபதி தேர்தல்களின் அடிப்படையில் நாம் நடாத்திய பிரதேச ரீதியிலான கருத்துக் கணிப்புக்கள், அண்ணளவான தேடல்கள் மூலம் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெறுமதிகளையும், உத்தேச வாக்களிப்பு பெறுமதிகளை உணரக்கூடியதாக இருந்தது. 

இப்போதுள்ள அரசியல் சூழலில், சிங்கள பெரும்பான்மை மக்களிடம் கொரோனா பரவல், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதிகார ஒருமுகப்படுத்தல் என்பன முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளன.

முஸ்லிம்,தமிழ் மக்களிடையே , ஜனாஸா எரிப்பு, அரசின் சிறுபான்மை விரோத போக்கு, மற்றும் பிரதேச மட்ட அதிகார பகிர்வுகள் (சாய்ந்தமருது சபை, கல்முனை கபளீகரம் ) போன்றன முக்கிய கருப்பொருளாக தேர்தலில் இடம்பிடிக்கலாம். 

அந்த வகையில் பொது பெரமுன அணியானது அம்பாறையில் 95 வீத சிங்கள, பௌத்த வாக்களர்களை கொண்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி அணியினரின் வாக்குகள் முஸ்லிம்கள்,சிங்கள பௌத்தர்கள், தமிழர்கள் என கணிசமான வாக்குபலத்தினை கொண்டுள்ளனர். இதில் ACMC மற்றும் NC கட்சியினர் தனியே முஸ்லிம் வாக்குகளையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தமிழர்களின் வாக்குகளையும் வாக்கு வங்கிகளாக கொடுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைக் கொண்டு அளவிடும் போது 259673 அண்ணளவான வாக்கினைப் பெற்ற சஜித் அணியில்  தமிழர்கள் 60000, ACMC 35000, UNP 30000(ரணில்) என பிரிக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் சஜித் கூட்டானது 135,000 வாக்குகளை பெரும் வாய்ப்பு வெளிப்படையானதாகும். அதிலும் மக்கள் நிராகரிப்பாக கருதி சுமார் 10,000 வாக்குகளை கழித்து விடின் சுமார் 125, 000 வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. 

அதே வேளை SLPP அணி பெற்ற 135,000 அண்ணளவான வாக்குகளில் தேசிய காங்கிரஸ் கட்சியினர் குறைந்த பட்சம் 25,000 வாக்குகளை பெறுவார்களாயின் சுமார் 110,000  வாக்குகளையும் ஆளும் கட்சி மோகம் என மேலும் வாக்குகளை சேர்க்கும் வாய்ப்புகள் வரக்கூடும் அவ்வாறு 10,000 வாக்குகள் சேர்கின்றது எனில் 120,000 வாக்குகளை அக்கட்சி பெறக்கூடும்.

இவ்விரண்டு கட்சிகளும் தலா 3,2 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனில் அடுத்த ஆசனம் தமிழ் கூட்டமைப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் 7 வது ஆசனம் பலத்த போட்டிக் குட்படும். ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என மும்முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. 

Post a Comment

0 Comments