மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரசின் ஆசனம் முன்னாள் முதலமைச்சரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது-உம்மு ஜாஸி-

இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களிடையே, மட்டக்களப்பில் தொய்வாக காணப்பட்ட கட்சி நடவடிக்கைகளை உச்சத்திற்கு மீள் பரிபானமளித்தவர் முன்னாள் முதலமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்கள் என்பது வெளிப்படையானதாகும்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் களமிறங்கி இருப்பது முஸ்லிம் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை உறுதிப் படுத்தியுள்ளது என்பது ஆழமான உண்மையாகும்.

மட்டக்களப்பில் தனிநபர் செல்வாக்குகளை அசைத்து முஸ்லிம் காங்கிரசை ஒரு ஸ்திரமான நிலைக்கு நகர்த்திய ஆளுமை மிக்க காலப்பகுதியாக முன்னாள் முதலமைச்சருடைய காலப்பகுதியை கொள்ள முடியும். அதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தங்களுடைய மானசீக ஆழுமையாக முன்னாள் முதலமைச்சரை கொண்டுள்ளார்கள்.

கட்சிக்குள் சிலரின் வெட்டுக் குத்துகளும், ஆளுநர்கள், ராஜாங்க அமைச்சர்கள் என எல்லோரையும் ஒரு கையினால் கையாண்டு, மறு கையினால் மக்களின் தேவைகளை முன்னோக்கி நகர்த்திய ஒருவராக முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் முன்னாள் முதலமைச்சரை இனங்கண்டுள்ளர்கள். 

தனிப்பட்ட வாக்கு வங்கியினைக் கொண்டுள்ள முன்னாள் முதலமைச்சர் இம்முறை பொதுத் தேர்தலில் களமிறங்கி இருப்பது, எதிரணி வேட்பாளர்கள் தமது தோல்வியை தாமே ஒப்புக் கொள்ளச் செய்கின்ற அளவுக்கு ஊடுருவியுள்ளமை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது.

விசேடமாக கற்குடா மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்களையும், அபிவிருத்தி, வேலை வாய்ப்புகளையும் மிக தெளிவாக அவருடைய காலப்பகுதிக்குள் நகர்த்தி இருந்தார். அத்துடன் ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கும் செயற் திட்டங்களையும் செயற்படுத்த அவர் தயங்கியதில்லை. தனது சொந்த வருமானத்தில் மக்களின் துயர் துடைக்கும் முன்னாள் முதலமைச்சரை விமர்சிக்கும் எவரும் அவரின் அளவுக்கு இல்லது போனாலும், அதில் கால்வாசி அளவுக்காவது மக்களின் துயர் துடைக்க செயற்படுவார்களா ? என்பது கேள்விக்குறியே 

Post a Comment

0 Comments