வழமையான கூட்டமாகவே முடிந்தது ; ஐ.தே.க குற்றச்சாட்டு


வழமைப்போலவே எவ்விதத் தீர்மானங்களுமற்ற கலந்துரையாடலாகவே நேற்று (12) தேர்தல் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடல் அமைந்திருந்ததென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ​தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “எம்மை அடிக்கடி அழைத்து ஒரே விடயத்தைக் கேட்பதில் பயனில்லை. எனவே, நல்ல தீர்மானத்துக்கு வருமாறு, தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் நான் கோரினேன். அத்துடன் நாட்டின் இன்றைய நிலையைப் பார்த்து சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இப்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவுகூட, அரசியல் செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது என எடுத்துரைத்தேன்” என்றார்.
“தேர்தல் நடத்தப்படுமானால், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிக்க அஞ்சுவார்கள். எனவே, இன்றைய நிலையில் தேர்தலை நடத்த முடியாது. எனவே, என்ன நடக்கிறதென்றுப் பார்ப்பதற்கு, குறைந்தது 5 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். தற்போது தேர்தலை எக்காரணம் கொண்டும் நடத்த முடியாது” என, அவர் மேலும் கூறினார். 

Post a Comment

0 Comments