இவற்றைத் திறக்க அனுமதியில்லைஅரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான வழிசமைக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட சில இடங்களைத் தொடர்ந்து மூடி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், வாராந்தச் சந்தைகள், நாள் சந்தைகள், சமூகமாகக் கூடி முன்னெடுக்கப்படும் வியாபார நடவடிக்கைகள், மசாஜ் நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நைட் கிளப்கள் போன்றவற்றைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், தனியார் மருத்துவ நிலையங்கள், சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, இன்றைய தினம் முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதேபோல், கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய அப்பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதுடன், சலூன் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் அந்தப் பிரதேசங்களிலுள்ள சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் இயங்க முடியும் என்றார்.
அத்துடன், சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் ஹோட்டல்களைத் திறப்பதற்கு அனுமதியில்லை எனத் தெரிவித்த அவர், இணையம் மூலம் உணவுகளை விற்பனை செய்வதற்கும் தங்குமிட வசதிகளை கொண்ட விடுதிகளை  தனிமைப்படுத்தல் கொள்கைக்கு அமைய திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை,ரெஸ்‌டூரண்டுகளைத் திறக்க அனுமதி இல்லை என்றார்.

Post a Comment

0 Comments