வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இ.போ.ச பஸ் சேவை


தூரப் பிரதேசங்களிலிருந்து மஹரகம அபேக்ஸா வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு, போக்குவரத்து வசதிகளை உடனடியாக வழங்குமாறு, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்து சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல இடங்களிலிருந்தும் மஹரகம வைத்தியசாலைக்கு மாதாந்த கிளினுக்காக பலர் வருகைத் தருவதுடன், நாட்டின் தற்போதைய நிலையில், அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பலரும் அமைச்சரிடம் முறையிட்டுள்ளமைக்கு அமையவே, அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments