கிம் உன் இரட்டை வேடமா ? காணாமல் எங்கே போனார் ?மர்ம தேசமாக விளங்கும் வட கொரியாவிற்குள் நடந்து கொண்டிருப்பது என்ன என்பது தொடர்பில் உலக ஊடகங்கள் தலையைப் பித்துக் கொள்ளும் அளவிற்கு அந்நாட்டுக்குள் விடை தெரியா நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மரணமடைந்திருப்பதாகவும், அவரால் எழுந்து நடக்கவே முடியாது என்றும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
இதனையடுத்து சர்வதே ஊடகங்கள் அத்தனையும் வட கொரிய அதிபருக்கு நடந்தது என்ன என்பது குறித்து ஆராயத் தொடங்கியது.
கிட்டத்தட்ட அவர் இறந்து விட்டதாகவே அறிவித்தும் விட்டனர். மிகப் பெரும் இறுதி ஊர்வலத்திற்கு அந்நாடு தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட, அவற்றுக்கு எல்லாம் மண்ணைத் தூவி நேற்றைய தினம் பொது நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
உண்மையில் வட கொரியாவிற்குள் என்ன நடக்கிறது? மர்ம தேசமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அந்த நாடு தற்போது செய்து கொண்டிருப்பது என்ன? இதுவரை காலமும் உன் எங்கே இருந்தார்? 
பாதுகாப்பு காரணங்களுக்காக உலக வல்லரசுகள், மற்றும் இராணுவ அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் இரானுவத்தலைவர்கள் தமது உருவ அமைப்பை ஒத்த இரட்டைகளை பொதுவாகவே பயன்படுத்தி வருவார்கள். அவ்வாறு வட கொரியாவின் ஜனாதிபதி செய்து கொண்டிருந்தால் அது வியப்புக்குரியதும் அல்ல என ஊகங்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments