கிணற்று நீர் மட்டம் குறைந்ததால் கல்முனையில் பதற்றம் ; மக்கள் அச்சத்தில்


களுவாஞ்சிக்குடி, நீலாவனை, கல்முனை பிரதேசங்களில் சில இடங்களில் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் கல்முனை போலீசார் மக்கள் பதற்றமடைய தேவையில்லை என அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். அதேவேளை இடர் முகாமைத்துவ பிரிவினரும் இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளனர். 

அதேவேளை தென்கிழக்கு, கிழக்கு கடற்கரை கொந்தளிப்பாக இருக்கலாம் எனவும், தாழமுக்கத்திற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

Post a Comment

0 Comments