ரிஷாத் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தொடர்ச்சியாக தகனம் செய்யப்படுவதால், முஸ்லிம் சமூகம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
உலகில் 180 க்கு மேற்பட்ட நாடுகளிலும் உலக சுகாதார ஸ்தாபனம்  2020.03.24 ஆம் திகதி வெளியிட்ட, 'கொவிட் – 19 இன் காரணமாக மரணிக்கும் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு வழிகாட்டல்களின்' பிரகாரமும், கொரோனா தொற்றுநோய் காரணமாக மரணித்த உடல்களை புதைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. 
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் பல்லாயிரக்கணக்கான உடல்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் போன்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்ற நாடுகளில் கூட பாரிய புதைகுழிக்குள் அடக்கம் செய்வதனை சர்வதேச செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
ஆனால், எமது நாடான இலங்கையில் 2020.04.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் முடியும் என்பதனை மாற்றி, தகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஏப்ரல் 11 ஆம் திகதி  வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments