மு.கா பிரதித்தலைவர் ஹரிஸ் எம்.பி யின் மக்கள் செல்வாக்கு ; ஆட்டங்காணும் எதிர்முகாம்கள்


-அனுஷாத் -

முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களுள் முக்கியமானவராக கருதப்படும் அதன் பிரதித்தலைவர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் மக்கள் ஆதரவின் காரணமாக எதிர்கட்சிகளும், முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளும் தாறுமாறான கருத்தாடல்களை திட்டமிட்டு அவருக்கு எதிராக செய்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் முதன் முதலாக அரசுக்கு எதிராக ஐ.நா வரைக்கும் மனு அனுப்பியமையும், தற்போது அரசுக்கெதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருப்பதுவும் மிகவும் ஆழமாக முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கான தீனி போடப்பட்ட விடயமாக நோக்கப்படுகிறது.

சமூக நிலைப்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக ஸ்திரத்தன்மையுடன் செயற்பட்டு வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் மீது முஸ்லிம்கள் பெரிதும் பல்வேறான எதிர்பார்ப்புகளை சுமத்தியுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தின் எல்லா பிரதேசங்களிலும் ஆழமான ஆதரவு தளத்தினையும் கொண்டுள்ளார். இக்காலகட்டத்தில் இவர்மீது வந்ததிகளையும், பொய்ப் பரப்புரைகளையும் பரப்புவது முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு வைக்கப்படும் ஆப்பு என்றே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களின் விரோதிகள் இதனை நன்கு திட்டமிட்டு நகர்த்தி வருகின்றனர்.

பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் தலைநகரான கல்முனை நகர் தோற்கடிக்கப் பட வேண்டும் என்கிற பலரின் எதிர்பார்ப்புகளுக்கு இம் மக்கள் ஆதரவுள்ள தலைமையின் வளர்ச்சி பெரிதும் புளியைக் கரைத்துள்ளது. இதற்காக சில வங்குரோத்து சமூக செயற்பாட்டளர்களும் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் இணைந்து செயற்பாட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகத்தின் மீதான உண்மை ஆதரவும், அக்கறையும் இருப்பவர்கள் தமது ஆதரவினையும் உணர்வினையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் போது, பதவி ஆசையும், தமது சுயநல எதிர்பார்ப்பும் கொண்ட சிலரின் நடவடிக்கைகள் வெறும் வாய் சவடால்களுடன் சமூகத்திற்காக தியாகம் செய்பவர்களை விமர்சனம் செய்து வருகின்றமை சமூக மட்டத்தில் பெரிதும் எதிரலைகளை உண்டு பண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


Post a Comment

0 Comments