மீண்டும் நாடு முடக்கப்படும் ; அனில் ஜசிங்க எச்சரிக்கைகடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி மட்டுமே. இந்தச் சூழலை தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் மீண்டும் கொரோனா யுகத்துக்குள் தள்ளப்படுவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு சிலர் விடும் தவறுகள் காரணமாக மீண்டும் நாடே முடக்கப்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம் என கூறியுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியிலும் நாளை திங்கட்கிழமை நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில், இது குறித்து விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் வாழ்க்கை முறைமையை வழமைக்கு திருப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் அரசால் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் வழமை போன்று முழுமையாக மக்களை நடமாட இடமளிக்க முடியாது என்ற காரணத்தால் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் முதல் கட்டமாக சில தரவுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மிகவும் அச்சுறுத்தல் என கருதிய மேல் மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் இதுவரை மக்கள் எவ்வாறு கடந்த இரு வாரங்களாகச் செயற்பட்டார்களோ அதே போன்றே தொடர்ந்தும் செயற்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments