ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி


மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் இராணுவ வீரர்களை சேவையில் ஈடுப்படுத்தும் நடவடிக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த நடவடிக்கை கோட்டாபய அரசாங்கத்தாலும் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments