முல்லைத்தீவை அதிர வைத்துள்ள திடீர் மரணங்கள்! காரணம் என்ன?முல்லைத்தீவு - கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரின் திடீர் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்தின் போது அவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
அவர்களில் இன்று காலை ஒருவரும் மாலை ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒருவர் மார்பு சம்பந்தப்பட்ட நோயுடனும் மற்றுமொருவர் வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்திருந்த நிலையில் அவர்களது மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.” என்றார்.
செய்தி : IBC

Post a Comment

0 Comments