நமது வேட்பாளர் எ.எல்.எம். நசீர் ; அட்டாளைச்சேனை மு.கா வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது


-அபூ ஜாஸி-
அட்டாளைச்சேனையின் முப்பத்தைந்து வருட அதிகார தாகத்தை தனித்த ஓங்கி உயர்ந்த அதிகாரத்தின் உருவமே எ.எல்.எம். நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.  அதி வேகமான அரசியல் வளர்ச்சி, மக்கள் மனங்களின் நீங்கா இடம் கொண்ட மனித நேயன் புகழ்ச்சிகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் தன்னை மனிதனாக காட்டிக் கொண்ட மக்கள் தலைவன்.
  • பிரதேச சபை தவிசாளர் 
  • மாகாண சபை உறுப்பினர்
  • மாகாண சுகாதார அமைச்சர்
  • பாராளுமன்ற உறுப்பினர்  
என பல்முக ஆளுமையாக செயலாற்றிய அனுபவத்துடன், அட்டாளைச்சேனை பிரதேசத்தினதும் திகாமடுல்ல மாவட்டத்தினதும் அபிவிருத்தி மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளையும் மக்களின் உரிமை ரீதியான போராட்டங்களையும் தன் இலக்காக கொண்டு தேர்தல் களமிறங்கியிருக்கின்றார்.
இன்றைய பொதுத்தேர்தலில் தவிர்க்கவியலா அபேட்சகராக களமிறங்கி இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவட்டத்தின் நிச்சய வெற்றி வேட்பாளராக எதிரிகளாலும் முனுமுனுக்கப்படுகிறார். எல்லாத் தரப்போடும் அன்போடு பழகும் நசீர் "மக்கள் தொடர்பாடலுக்கு ஓர் எடுத்துக்காட்டு".

கடந்த அரசில் வழங்கப்பட்ட நிதிகளை தனது ஊரோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் மிகக் காத்திரமாக பகிர்ந்தளித்து, கட்சியின் வளர்சிக்காக எதிர்பார்ப்பின்றி செயற்பட்டார். அட்டாளைச்சேனையின் வளர்ச்சியை விரும்பாதவர்களும், தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை வைத்திருந்தவர்களுமே இன்று விமர்சகர்கள்.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்தோடு அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேசம், முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் கோட்பாடுகளை என்று தலையில் தூக்கி அழகு பார்க்கும் ஒரே ஊர் என்றால் அது மிகையல்ல. கடந்த காலங்களில் மாவட்டத்தின் மூன்று வேட்பாளர்களுக்கும், தலைமை கடைக்கண் காட்டும் வேட்பாளர்களுக்கும் அட்டாளைச்சேனை தனது கடமையை சரிவரச் செய்ய தவறியதே இல்லை. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஏனைய ஊர்களும் தமது நன்றிக்கடன்களை அட்டளைச்சேனைக்கு காட்ட வேண்டிய நல்ல தருணம் வந்திருக்கின்றது. அட்டாளைச்சேனை பொருத்தமான வேட்பாளரையும் நிறுத்தி இருக்கின்றது. வரலாற்றில் செய்நன்றி செலுத்தும் வரலாற்றை யார் எழுதப்போகிறார்கள் என்பதை பொதுத்தேர்தல் முடிந்த கையோடு எழுதுவோம். 

திகாமடுல்ல மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர் எ.எல்.எம். நசீர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 

Post a Comment

0 Comments