ஈரானில் அடுத்த அழிவு ; பாரிய நடுக்கம்ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஒருவர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் வடக்குப் பகுதியில் உள்ள தமாவாண்ட் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆழம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு தற்போதுவரை ஒருவர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லையென ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments