தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


ஸ்ரீலங்காவில் தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், நாளை விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணதெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிறுவனங்களை சோதனையிட வருகை தரும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை உரிய வகையில் கடைப்பிடிக்காத நிறுவனக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஆடை தொழிற்சாலைகளை தொடர்ந்தும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments