தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறார் ராஜித செனாரத்னேமூன்றாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீர்கொழும்பில் உள்ள பள்ளன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படலாம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ராஜித - இரண்டாம் இணைப்பு
இன்று மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மே மாதம் 27 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித கைது
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பின் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சற்றுமுன்னர் சிஐ டியில் சரணடைந்த ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டதாகவும் அவர் கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments