பிரதமருடன் பேச ஐ.தே.க மற்றும் த.தே.கூ இணக்கம் ???


கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,  இடையிலான கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன அறிவித்துள்ளன.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன குறித்த சந்திப்பில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments