பறக்கும் தட்டுக்கள் உண்மையானவை ; பெண்டகன் உறுதி (வீடியோ)அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முதல்முறையாக அதிகாரபூர்வமாக பறக்கும் தட்டு வகை விமானங்களின் வீடியோக்களை கடந்த மாதம் வெளியிட்டது.
ஏலியன்கள் பறப்பதாக அஞ்சப்படும் unidentified flying objects எனப்படும் யு.எஃப்.ஓ விமானங்களின் வீடியோக்கள் ஆகும் இது.
இதுவரை எந்த நாட்டு அரசும் இது போன்ற வீடியோக்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது கிடையாது. எந்த நாட்டு அரசும், எங்கள் வான் பகுதியில் பறக்கும் தட்டுகள் சென்றது என்று ஒப்புக்கொண்டது கிடையாது.
ஆனால் முதல் முறையாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வெளியான இந்த வீடியோக்களை தற்போது பென்டகன் அதிகாரபூர்வமாக வெளியிட்டு, அது உண்மைதான் என்று கூறியுள்ளது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது.
2013ல் இருந்த விமானப்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளை செய்யும் போது இந்த யுஎஃப்ஓ விமானங்கள் அவர்களை கடந்து சென்றுள்ளது.
தங்கள் விமானத்தில் இருக்கும் கேமரா மூலம் இதை அவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். தங்கள் விமானத்திற்கு மிக அருகில் வந்துவிட்டு பின் அந்த யுஎஃப்ஓ தங்களை கடந்து சென்றதாக அமெரிக்க விமானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோதான் தற்போது வெளியாகி உள்ளது.
மிகுந்த ஆராய்ச்சிக்கு பின் வீடியோ உண்மை என்று தெரிந்த காரணத்தால் தற்போது பென்டகன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முக்கியமான விஷயங்கள் எதுவும் வெளியே வராது.
மக்களுக்கு சிக்கல் எதுவும் ஏற்படாது என்பதால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த யுஎஃப்ஓ யாருக்கு சொந்தமானது, எப்படி வந்தது என்பது தொடர்பாக இன்னும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ குறித்து தற்போது கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது . அதன்படி எல்லா யுஎஃப்ஓ விமானங்களும் பசிபிக் பெருங்கடலுக்கு மேலேதான் பறந்துள்ளது. 2013ல் இருந்து 2015 அதிகமாக இந்த விமானங்கள் பறந்துள்ளது. மொத்தம் 7 முறை இந்த யுஎஃப்ஓ விமானம் இப்படி பறந்துள்ளது. 8வது முறை கடந்த 2019ல் இதேபோல் நடந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட W-72 கடல் பகுதியில் இந்த யுஎஃப்ஓ பறந்துள்ளது.
கடந்த 2013 முதல்முறையாக இந்த யுஎஃப்ஓ தோன்றியுள்ளது. அப்போது இதன் தோற்றம் ஒரு ஏவுகணை அளவிற்கு இருந்துள்ளது. அமெரிக்கா போர் விமானம் ஒன்று இதை பார்த்துள்ளது.
இது தனது பின்பக்கம் புகையை கக்கியபடி பறந்து சென்றுள்ளது. உலகில் இதற்கு முன் இது போன்ற வேகத்தில் செல்லும் விமானம் எதையும் எந்த நாடும் உருவாக்கவில்லை. அதனால் இது தொடர்பாக சந்தேகம் நிலவி வருகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
அதன்பின் கடைசியாக 2019 பிப்ரவரி 13ல் இதேபோல் யுஎஃப்ஓ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பலூன் ஒன்று இதை கண்டுபிடித்து உள்ளது,.
27000 அடி உயரத்தில் இந்த யுஎஃப்ஓ பறந்துள்ளது. பலூனில் இருக்கும் கேமரா மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான விமானம், எப்படி வந்தது, யார் அனுப்பியது என்று எந்த விதமான விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments