இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்கு புதிய முயற்சி



இலங்கையில் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு பொதுப் போக்குவரத்து அமைச்சு புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
இதற்கமைவாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதியிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிர திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த சேவையாளர்கள் குறித்து, நிறுவன பிரதானியிடமிருந்து கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே புகையிரத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புகையிரதங்களில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தகவல் அறிவிக்கப்பட்டும். புகையிரதங்களில் பயணிப்பதற்காக இந்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்று புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகள் சுகாதார முறைப்படி அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுப் போக்குவரத்தினை செயற்படுத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் தொடர்பில் தெளிபடுத்துமாறு பொதுப் போக்குவரத்து அமைச்சு உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments