அமெரிக்கா திட்டமிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும்! பகிரங்க எச்சரிக்கை விடுத்தது ஈரான்
ஈரான் மீதான ஆயுத வர்த்தக தடையை நீட்டிக்க அமெரிக்கா திட்டமிட்டால் கடுமையான பதிலடி கொடுப்போம் என அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி அச்சுறுத்தியுள்ளார்.பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்திற்கான வரம்புகளை ஏற்றுக்கொள்வதற்கான உலக சக்திகளுடனான ஒப்பந்தத்தின் கீழ், ஐ.நா ஈரான் மீது விதித்த ஆயுதத் தடை எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.2018-ல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீதான தடையை நீட்டிக்க விரும்புவதாகக் கூறுகிறது.
புதன்கிழமை உரையாற்றி ஈரான் ஜனாதிபதி ரூஹானி, அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான அமெரிக்காவின் முடிவைப் மீண்டும் மீண்டும் விமர்சித்தார், அதை அவர் ‘முட்டாள் தனமான தவறு’ என்று அழைத்தார்.

Post a Comment

0 Comments