ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை ; ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி


ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியில் இந்த பிரச்சினைதை தான் தீர்க்க முயன்றதாக கூறிய அவர் தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இந்த விடயத்தில் ஜனநாயக ரீதியில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும்,சிலர் ராஜதந்திர மட்டத்தில் முயற்சிப்பதாகவும் கூறியுள்ள அவர் எமது உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை என கூறியுள்ளார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தன்னை விமர்சிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்
“ நான் அமைச்சரோ எம்பியோ கிடையாது ,பல ஆயிரம் வாக்குகளை பெற்று வந்தவனல்ல நான். கட்சியுடன் தொடர்புபட்டுள்ளதால் என்னை தேசிய பட்டியலில் இணைத்துள்ளார்கள்.என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. கடந்த தேர்தலில் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகள் கிடைத்திருந்தால் இதைவிட பல மடங்கு சாதித்திருக்க முடியும்.உரிமையுடன் தலையிட்டிருக்க முடியும்.எமக்கு கிடைக்கும் வாக்குகளை தடுத்து விட்டு எப்படி எங்களிடம் எதிர்ப்பார்க்க முடியும்.இந்த பிரச்சினையை அரசிலாக்க கூடாது.
சகல விடயங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பின் ஆலோசனைகளுக்கு அமையவே ஜனாதிபதி செய்கிறார்.எம்மால் முடிந்தவற்றை செய்துவிட்டு இறைவனிடம் பொறுப்புக்கூறவேண்டும்.இறுதி முடிவு அவனின் கையிலேயே உள்ளது.

Post a Comment

0 Comments