குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா ; பீ.சீ.ஆர் பரிசோதனையில் உறுதி


கொரோனா  வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
67 வயதுடைய குறித்த நபருக்கு, கடந்த மார்ச் 17 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 
இந்நிலையில், சிகிச்சையில் குணமடைந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அவர் வீடு திரும்பியுள்ளார். 
வீட்டுக்கு வந்து 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவர், கடந்த 30 திகதி நெஞ்சு வலி காரணமாக கொழும்பு  தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் பீ.சீ.ஆர் பரிசோதனையில்,  அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments