அமெரிக்க அதிபரின் அவசர உத்தரவு


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, “ரெம்டிசிவிர்” என்ற ஊசி மருந்தை பயன்படுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அவசர உத்தரவு மூலம், அந்த மருந்தை அங்கீகரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ரெம்டிசிவிர் மருந்தால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் குணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஜிலெட் சயின்சஸ்” என்ற நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது.

வெள்ளை மாளிகையில், அந்த நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டேனியல் ஓ டேயுடன் இணைந்து நிரூபர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இது மிகவும் நம்பிக்கையளிக்கும் செய்தி என்று தெரிவித்தார்.
கொரோனா பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அல்லது பெரியவர்களுக்கு, ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டிருப்பது, ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுவது அல்லது வென்டிலேட்டரில் இருப்பது ஆகியவைதான் கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடையாளம் என, இதை அந்த அமைப்பு வரையறுக்கிறது. அப்படிப்பட்ட நோயாளிகளுக்குத்தான் ரெம்டிசிவிர் மருந்தை கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments