உலக வங்கி அவசர எச்சரிக்கை


கொவிட்-19இன் பாதிப்பு, உலகளாவிய ரீதியிலுள்ள 60 மில்லியன் மக்களை தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என, உலக வங்கி, நேற்று (20) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 அவசர சுகாதார ஆதரவுக்கான 10 நாடுகளின் மைல்க்கல் தொடர்பான ஊடகவியலாளர் மாடொன்றில் உரையாற்றிய உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மெல்பாஸ்,  கணிப்பின்படி, இந்த வருடம் உலகளாவிய ரீதியில் பொருளாதார மந்த நிலையே காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 ஆல் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு, முடக்கங்கள் காரணமாக, பல நாடுகளின் அபிவிருத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சுமார் 60 மில்லியன் மக்கள், கடுமையாக வறுமைக்குள் தள்ளப்படுவர் என்றும் அதேபோன்று, கடந்த மூன்று வருடங்களால், வறுமையை ஒழிப்பதற்காக பல நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அப்படியே அழிந்து போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது நெருங்கிய உறவுகளை குடும்பங்கள் இழந்துள்ளன என்றும் மில்லியன் கணக்கான தொழில் இழக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைப்புகள் அனைத்தும், உலகளாவிய ரீதியில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
'எனவே, உலகவங்கி, தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கண்காணித்து வருவதுடன், சுமார் 100 நாடுகளுக்கு அவசர உதவிகளை ஏற்பாடு செய்து அறிவித்துள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், அந்த 100 நாடுகளுக்குள் 160 பில்லியன் டொலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
'இந்த உதவித் தொகைகள் அனைத்தும், அடுத்த 15 மாதங்களில் அந்த நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் இந்த 100 நாடுகளிலேயே, உலக அளவில் 90 சதவீதம் மக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
'இதில் 39 ஆப்பிரிக்கா நாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் அதேபோல், மூன்றில் ஒரு பங்கு, ஆப்கானிஸ்தான் சாட், ஐதி, மைதர் போன்ற பலவீனமான மற்றும் பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்ட நாடுகளும் உள்ளடங்குகின்றன' என்றும் அவர் இதன்போது  மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments