இருவர் அடித்துக் கொலை
ஹொரண அரமனாகொல்ல பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11.10 அளவில் இடம்பெற்றுள்ளது.

அரமனாகொல்ல பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதன்போது உயிரிழந்த ஊழியர்கள் மீது மற்றுமொரு ஊழியர் கடுமையான பொருள் ஒன்றினால் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்டதிலே குறித்த இரு ஊழியர்களும் உயிரிழந்துள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர் பலத்த காயங்களுடன் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

33 மற்றும் 35 வயதானவர்களே இதன்போது உயிரிழந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments