சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (18) இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் மாலை ஐந்து மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
இதனை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments