முப்படைகளை சேர்ந்த 533 பேருக்கு கொரோனா



கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 533 பேர் முப்படையினர் எனவும், அவர்களில் 521 பேர் கடற்படையினர் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கடற்படையினரில் 189 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 332 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே 11 இராணுவத்தினரும், ஒரு விமானப் படைச் சிப்பாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
முப்படையினருடன் நெருக்கமாகப் பழகிய 36 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments