மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்றுநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 521 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், இதுவரையில் 162 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளனர்.
செ/மூ: த/மி

Post a Comment

0 Comments