11 மாவட்டகளுக்கு எச்சரிக்கைநாட்டின் 11 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் இதை தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய 11 மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் இருந்து ஏப்ரல் மாதம் 413 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் இதுவரை 100 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments