கொரோனாவால் இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
அனைத்து வாகனங்களின் விலைகளும் நூற்றுக்கு 10 முதல் 15 வீதமளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் யென் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
இதன்படி, இதுவரை அதிசொகுசு வரிக்குள் உள்ளீர்க்கப்படாத 1000 சிசி கொள்ளளவுக்கும் குறைவான இயந்திர திறன்கொண்ட வாகனங்களும் அந்த வரிக்குள் உள்ளீர்க்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மத்தியதர வகுப்பு மக்கள் பயன்படுத்தும் இயந்திர கொள்ளளவு 1000 குறைந்த சிறு வாகனங்களுக்கு இந்த வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன காட்சியறைகள் சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ஊரடங்கு சட்டம் அமுலாகும் காலத்திற்கு மாத்திரமாவது, வங்கிக் கடனுக்கான வட்டியை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், இது தொடர்பில் வங்கிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, வாகனங்களின் விலைகள் நூற்றுக்கு 15 வீதமளவில் உயர்வடைகின்றன.
இதன்படி, டொயோடோ பெஸோ 38 முதல் 42 இலட்சம் வரையிலும்,
டொயோடோ ப்றீமியர் 90 முதல் 95 இலட்சம் வரையிலும், டொயோடோ எக்ஸியோ 75 முதல் 78 இலட்சம் வரையிலும், டொயோடோ றைஸ் 70 முதல் 75 இலட்சம் வரையிலும், டொயோடோ சி.எச்.ஆர் 80 முதல் 85 இலட்சம் வரையிலும் அதிகரிக்கின்றன.
ஹொண்டா சி.ஆர்.வி 120 முதல் 125 இலட்சம் வரையிலும், டொயோடா டபள் கெப் 125 முதல் 130 இலட்சம் வரையிலும், சுசுக்கி எவரி சிற்றூர்ந்து 32 முதல் 35 இலட்சம் வரையிலும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments