மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா???: அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள்கிம் ஜாங் தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில், பொதுவாக ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் தலைநகர் Pyongyang-ல் உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்றும், அதுவும் எதிர்வரும் வாரங்களில் என நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதியில் இருந்தே பொதுவெளியில் தென்படாத வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன், அந்த பிராந்தியத்தில் இருந்து வெளியாகும் தகவலின்படி, இதய அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் மரணமடைந்துள்ளார் என்பதே.

Post a Comment

0 Comments