பலவருடங்களுக்கு பின்னர் தூய்மையான கங்கை யமுனை ஆறுகள்கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே பல்வேறு நகரங்களில் மாசு குறைந்து காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வடமாநிலங்களில் பாயும் நதிகளான கங்கை, யமுனை ஆறுகள் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது தூய்மையாகி உள்ளன.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் மனிதர்களால் நடத்தப்படும் சடங்குகள் குறைந்ததாலும் கங்கை, யமுனை நதிகள் தூய்மை அடைந்துள்ளதாகவும், தற்போது குடிப்பதற்கு ஏற்ப நீரின் தரம் உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments