இலங்கைக்கு மேலும் நெருக்கடி


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு மேலதிகமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தகவல் வெளியிடுகையில்,
கொரோனா தொற்று அபாயத்திற்குள்ளும் தற்போது மேலும் இரண்டு அபாயத்தினை எதிர் நோக்குகிறோம். டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அந்த நோயின் பரவலை குறைப்பதற்காக உரிய துறையினர் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.
கொரோனா, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய 3 நோய் தொற்றினதும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.
எனினும் அவை இலங்கை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தை நோக்கி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments